கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை

கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
X
கூடலூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.

கூடலூர் அருகே செலுக்காடி என்னும் கிராமத்தில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள செலுக்காடி என்னும் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒற்றையடிப்பாதையில் உலா வந்த காட்டு யானையை கண்ட பொதுமக்கள் அலறியடித்து கூச்சலிட்டனர். மேலும் யானையை சப்தமிட்டு மக்கள் விரட்டினர் இருந்தும் யானை தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வருவதால் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!