கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை

கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை
X

காட்டு யானையால் சேதமடைந்த வீடு. 

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக் கொல்லி பகுதியில் வீட்டை சூறையாடிய விநாயகன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்.

சமீபகாலமாக கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் விநாயகன் என்ற காட்டு யானை அடிக்கடி குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால், வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் யானையை விரட்டினாலும் மீண்டும் கிராம பகுதியை நோக்கி யானை நாள்தோறும் உலா வருகிறது. இந்நிலையில் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக் கொல்லி பகுதியில் லீலா என்பவரது வீட்டை யானை சூறையாடியது. மேலும் விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

விநாயகன் என்ற காட்டு யானை அடிக்கடி கிராமப்பகுதியில் உலா வருவதால் நாள்தோறும் உயிர்போகும் அச்சத்தோடு இருந்து வரும் கிராம மக்கள் யானையை அடர் வனத்தில் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!