உதகை அருகே மசினகுடி பகுதியில் பிளாஸ்டிக்கை உண்ணும் யானை .

உதகை அருகே மசினகுடி பகுதியில் பிளாஸ்டிக்கை உண்ணும் யானை .
X

ஊருக்குள் உலாவரும் காட்டு யானை

குப்பைத் தொட்டிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால், உயிரிழக்கும் அபாயம்

உதகை அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை குப்பைத் தொட்டிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால், உயிரிழக்கும் அபாயம் உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது வாழைத்தோட்டம் கிராமம். இந்த கிராமத்தில் ரிவோல்டோ என்ற ஆண் காட்டு யானை ஒன்று அண்மைக்காலமாக முகாமிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாத ரிவோல்டோ என்ற ஆண் காட்டு யானை, தற்போது மாலை நான்கு மணியளவில் வாழைத்தோட்டம் பேருந்து நிலையம் மற்றும் கிராமத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் நடந்து செல்கிறது.

அத்துடன் வீட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப்பொருட்களை தேடும் இந்த யானை, வாழைத்தோட்ட கிராமத்தில் உள்ள குப்பை தொட்டியில் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால், பிளாஸ்டிக் கழிவுகள் உடலுக்குள் சென்று காட்டு யானை உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

எனவே வனத்துறையினர் உடனடியாக பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு கிராமப்பகுதியில் உலாவரும் இந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் அல்லது முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ரிவால்டோ காட்டு யானையை வனத்துறையினர் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமிற்கு அழைத்து சென்றதும், உடனே அந்த யானை மீண்டும் வாழைதோட்டம் பகுதிக்கு ஒடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!