கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானைக்கு சிகிச்சை

கூடலூர் பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தாமல் வனத்துறையினர் பிடித்து, சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த 7 மரம் போன்ற பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதியில், இரண்டு ஆண்டுகளாக, காட்டு யானை ஒன்று முதுகில் காயத்துடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அந்த யானைக்கு, வனத்துறையினர் பழங்களில் மாத்திரை வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், யானைக்கு காயம் குணமாகவில்லை. எனவே, அந்த யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு யானையை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் .

இந்நிலையில், புத்தூர்வயல் பகுதியில் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் கயிறு கட்டி யானையை பிடித்தனர் . தற்போது மழை பெய்து வருவதால் யானையை முதுமலைக்கு கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது . விரைவில், சிகிச்சை அளிப்பதற்காக யானை முதுமலைக்கு கொண்டு செல்லப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!