கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி
X

குனியல் கிராம பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை.

கூடலூர் குனியல் கிராமப் பகுதியில் இன்று காலை குடியிருப்பை ஒட்டிய பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி.

சமீபகாலமாக கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அகழிகளை தாண்டி ஊருக்குள் வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தாலும், ஊருக்குள் யானைகளின் நடமாட்டம் குறைந்தபாடில்லை. இரவில் மட்டுமே உலா வந்த காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 அளவில் குனியல் என்ற கிராமப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்பு மக்கள் கூச்சலிட்டதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. யானை நடமாட்டத்தால் அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்