உதகை அருகே வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

உதகை அருகே வனத்துறை சார்பில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், தண்டோரா மூலம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், வனத்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது; உணவு வழங்குவது உள்ளிட்ட செயலில் ஈடுபடக்கூடாது.

இதை மீறுவோர் மீது வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில், இது தொடர்பாக துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. முதுமலை புலிகள் காப்பக மசினகுடி கோட்ட துணை இயக்குநர் உத்தரவுப்படி நடந்த இந்நிகழ்ச்சியில், வனக்கள பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்