எலச்சிபாளையம் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி

எலச்சிபாளையம் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி
X

பைல் படம்.

எலச்சிபாளையம் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, வையப்பமலை அருகே மொஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன் (34), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு, இவர் தனது டூ வீலரில் எலச்சிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் இண்டூரைச் சேர்ந்த மாது என்பவரின் மகன் கல்குவாரி தொழிலாளியான ஜெய்சங்கர் (19) என்பவர், எதிர் திசையில் டூ வீலரில் வந்தார்.

செக்காரப்பட்டி அருகே 2 டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அன்புசெல்வன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தார். ஜெய்சங்கர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்