கொண்ணையார் அருகே பழுடைந்த பேர்வெல் கிணறு சீரமைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

கொண்ணையார் அருகே பழுடைந்த பேர்வெல் கிணறு சீரமைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கொண்ணையார் அருகே பழுதடைந்த போர்வெல் கிணறு சீரமைக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீர் பிடித்துச்சென்றனர்.

கொண்ணையார் கிராமத்தில் 2 ஆண்டுகளாக பழுதடைந்த போர்வெல் கிணற்றை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, கொண்னையார் கிராமம் ஆயித்தாகுட்டை, கரியாம்பாளையம் பகுதியில் ரோடு ஓரம் பல ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் கிணறு அமைக்கப்பட்டது. இதில் இருந்து சுற்றுவட்டார கிராம மக்கள் தேவைக்காக தண்ணீர் எடுத்துச்சென்றனர். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அந்த போர்வெல் கிணறு பழுதடைந்தது. இதனால் குடிநீர் எடுக்க முடியாமல், கிராம மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

அவர்கள், பழுதடைந்த போர்வெல் கிணறை சீரமைத்து தரும்படி கொன்னையார் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினர். இருப்பினும், போர்வெல் கிணறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கடந்த வாரம் போர்வெல் கிணறுக்கு யாகபூஜை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்மந்தமான செய்தி நமது இன்ஸ்டாநியூஸில் வெளியானது.

இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், போர்வெல் கிணறை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அந்த போர்வெல் கிணறில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் கொன்னையார் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!