திருச்செங்கோடு அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்செங்கோடு அருகே ஆட்டோவில்  கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கடத்தப்பட்ட 2 டன் ரேசன் அரிசி, ஆட்டோவுடன் கைதான மனோஜ்.

திருச்செங்கோடு அருகே ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்செங்கோடு தாலுக்கா, எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார்-பருத்திப்பள்ளி ரோட்டில் தனியார் கிரஷர் தொழிற்சாலை உள்ளது. இங்கு எலச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதபிறவி தலைமையில் நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு எஸ்ஐ., மலர்விழி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், சரக்கு ஆட்டோவில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி, போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் கொல்லிமலையை சேர்ந்த மனோஜ் (22) என்பதும், திருச்செங்கோட்டில் இருந்து கொல்லிமலைக்கு 2 டன் ரேஷன் அரிசியை ஆட்டோவில் கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோ டிரைவர் மனோஜை கைது செய்தனர். மேலும், 2 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருச்செங்கோடு டிஎஸ்பி பார்வையிட்டார். ரேசன் அரிசி கடத்தலை கண்டுபிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார். இது போன்று தொடர்ந்து சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், மீண்டும் அதே குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று எஸ்.பி எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!