திருச்செங்கோட்டில் அக். 7 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக். 7ம் தேதி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், கம்ப்யூட்டர் பயிற்சி, தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (Bio Data) உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற வெப்சைட்டில் தங்களது விபரங்களை பதிவு செய்திட வேண்டும்.
மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260, 9159662342 என்ற தொலைபேசிஎண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu