மல்லசமுத்திரம் அருகே ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது

மல்லசமுத்திரம் அருகே ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது
X
மல்லசமுத்திரம் அருகே ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, மல்லசமுத்திரம் அருகே உள்ள காளிப்பட்டி, பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (28). சம்பவத்தன்று இரவு மூர்த்தி கள்ளுக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து அக்கரைப்பட்டி பிரிவு ரோட்டிற்கு தனது டூ வீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், மூர்த்தியை வழிமறித்து தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணம் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்த மூர்த்தி, சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் மல்லசமுத்திரம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மூர்த்தியிடம் வழிப்பறி செய்த வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), தனபால் (30), வெண்ணந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!