தமிழக அரசைக் கண்டித்து திருச்செங்கோட்டில் பாஜ சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம்
தமிழக அரசைக் கண்டித்து, திருச்செங்கோட்டில் பாஜக பட்டியல் அணி சார்பில், பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு:
தமிழக அரசைக் கண்டித்து, திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் , மத்திய அரசு ஒதுக்குகின்ற பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சி நிதியை, மாற்றுத்திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, பிச்சை அளிக்கும் போராட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட மேலிட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் ஆகியோர் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்கள்.
போராட்டத்தில், மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், பொதுச் செயலாளர்கள் தினேஷ்குமார், பட்டியல் அணி பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், சாந்தாமணி, துணைத் தலைவர்கள் செங்கோட்டையன், செல்ல வெங்கடேசன், செயலாளர் ராஜவேல், நிர்வாகிகள் ராமசாமி, பழனிவேல், சக்கரபாணி, பெரியசாமி உள்ளிட்ட திரளான பாஜகவினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் முடிவில், நாமக்கல் மாவட்டத்தில் பல கிராமங்களில் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில், பட்டியல் சமூக மக்கள் இன்று வரை வழிபாடு நடத்த உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. வருகின்ற நாட்களில் இது போன்ற தீண்டாமை கடைபிடிக்கும் கோயில்களை முற்றுகையிட்டு, மாபெரும் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என பாஜக பட்டியல் அணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu