மல்லசமுத்திரம் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு

மல்லசமுத்திரம் பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிப்பு
X

பைல் படம்.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத 15 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், சிலர் பல ஆண்டுகளாக சிலர் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக குடிநீர் வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் குடிநீர் வரி கட்டவில்லை. இதையெடட்டி, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில், பணியாளர்கள் வரி கட்டாத 15 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் 7 நாட்களில் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே வரி செலுத்தாதவர்கள், உடனடியாக டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future