நாமக்கல் 92 தேர்வு மையங்களில் வினாத்தாளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கன்டெய்னர் லாரி மூலம் நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூன்று முக்கிய மையங்களில் வைக்கப்பட்டுள்ளன, தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10,005 மாணவர்கள், 9,033 மாணவியர்கள் மற்றும் 304 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 19,342 மாணவ மாணவியர் 92 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர், தேர்விற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர், நேற்று நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வினாத்தாள் அடங்கிய பண்டல்கள் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய மூன்று முக்கிய மையங்களுக்கு பிரித்து எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தனித்தனி அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டு, அறைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன, தேர்வு நாட்களில் குறித்த நேரத்தில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள்களை வினாத்தாள் அலுவலர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வாகனங்களில் கொண்டு செல்லும் வகையில் இந்த மூன்று மையங்களில் வினாத்தாள்கள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன, மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இதன்மூலம் தேர்வு நடைமுறைகள் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறையால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu