கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை

கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை -   சப்-கலெக்டர் விசாரணை
X
கொல்லிமலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், வளப்பூர் நாடு பஞ்சாயத்து, செல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வந்தராஜ் (31). தனியார் மில்லில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவயாணி (19). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்நிலையில் தேவயாணிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையவில்லை. இதனால் விரக்தியடைந்த தேவயாணி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நாமக்கல் சப் கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி