கொல்லிமலை மலைப்பாதையில் திடீர் விரிசல்: போக்குவரத்து பாதிப்பு
கொல்லிமலையில் பெய்த கனமழையால் அரிப்பலாப்பட்டி அருகே ரோட்டின் குறுக்கே திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 1330 மீட்டர் உயரத்தில் உள்ளது. அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் இருந்து மலைக்குச்செல்ல 70 குறுகிய கொண்டை ஊசி வøளைவுகளைக் கடந்துசெல்ல வேண்டும்.
இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி போன்ற அருவிகள் உள்ளன. படகு இல்லம், தாவரவியல் பூங்கா போன்றவற்றை காணவும் தினசரி ஏராளமான சுற்றுலா பயனிள் வந்து செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதியில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளும் தண்ணீர் கொட்டுகிறது..
கொல்லிமலையில், தொடர் மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தேவனூர் நாடு பஞ்சாயத்து அரிப்பலாபட்டி கிராமத்தில் இருந்து விளாரம் செல்லும் ரோட்டின் நடுப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு திடீரென்று வெடிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நெடுஞ்சாலை துறையினர் மூலம் ரோட்டை சீரமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அரிப்பலாபட்டி கிராமத்திற்கு சென்று வந்த பஸ்கள் முன்னதாகவே திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் தேவனூர் நாடு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பஸ் போக்குவரத்தின்றி தவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu