கொல்லிமலையில் மது அருந்தியவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: வனத்துறை அதிரடி
நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் சம்பவத்தன்று கொல்லிமலை வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வனத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டங்களை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நாமக்கல் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது, கொல்லிமலை மலைப்பாதையில் 37வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் சாலையின் ஓரம் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அதைக்கண்ட ராஜாங்கம், நாமக்கல் வனச்சரகர் பெருமாளைத் தொடர்புகொண்டு வனப்பகுதியில் மது அருந்திய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வனச்சரகர் பெருமாள் தலைமையில், வனக்காப்பாளர்கள் சரவணபெருமாள், பிரவீன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும், அவர்களிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu