சேந்தமங்கலம்: பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி எஸ்.பியிடம் மனு

சேந்தமங்கலம்: பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை  அகற்றக்கோரி எஸ்.பியிடம் மனு
X
சேந்தமங்கலம் அருகே பொது வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள குப்பநாய்க்கனூரைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து குப்பநாய்க்கனூரில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தற்போது தனியாரால் புதியதாக வீடுகள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிக்கு செல்ல பூர்வீகமாக பொதுப்பாதை இருந்து வருகிறது. இதை விட்டால் வேறு பாதை வசதி இல்லை.

வருவாய்த்துறை ஆவணங்களிலும், இது பொதுப்பாதையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக பொதுமக்கள் செல்லக்கூடாது என்று தனியார் சிலர் எதிர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்