மணிப்பூர் படுகொலையை கண்டித்து சேந்தமங்கலத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!

மணிப்பூர் படுகொலையை கண்டித்து  சேந்தமங்கலத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!
X

மணிப்பூர் படுகொலையைக் கண்டித்து, சேந்தமங்கலத்தில், காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் படுகொலையை கண்டித்து சேந்தமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சேந்தமங்கலம்:

மணிப்பூர் இனப்படுகொலையை கண்டித்து, சேந்தமங்கலத்தில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப்படுகொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளரும் வட்டார தலைவருமான ஜெகநாதன் தலைமை வகித்தார். எருமப்பட்டி வட்டார தலைவர் தங்கராஜ், காளப்பநாயக்கன்பட்டி நகர தலைவர் கணேசன் மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் ஆலோசனை குழு உறுப்பினர் ராணி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளான கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கன்னியம்மாள், எருமப்பட்டி நகர தலைவர் செல்வசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் டாக்டர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வகுமார், கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணா, தமிழரசி, பத்மா, ஈஸ்வரி, சேந்தமங்கலம் முன்னாள் நகர தலைவர் நவநீதகிருஷ்ணன், புகழேந்தி , பழனியப்பன் உள்ளிட்ட காரங்கிரஸ் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!