சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

சேந்தமங்கம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேந்தமங்கம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 11ஆம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால்சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையப்பாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 12ம் தேதி செவ்வாய் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நலவடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்