எருமப்பட்டி பகுதியில் 15ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

X
பைல் படம்.
By - P.Nathan, Reporter |13 Jun 2022 3:30 PM IST
எருமப்பட்டி பகுதியில் 15ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் 15ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளதாவது:
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 15ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நலவடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu