நாமக்கல் மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம்: எம்.பி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 50 அரசு பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம்: எம்.பி தகவல்
X

ஸ்ரீ ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்துறையின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

இளைஞர் திறன் விழாவில், திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அனுமதி கடிதத்தை ராஜ்யசாப எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார்.

தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், முதல் கட்டமாக 50 தொடக்கப்பள்ளிகளில் படித்து வரும் 2,856 மாணவ, மாணவிகள் பயன் பெற உள்ளனர் என ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

எருமப்பட்டி ஸ்ரீ ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்துறையின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முகாமை துவக்ககி வைத்துப் பேசியதாவது:

கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வேலைவாய்ப்பு பெறவும், அவர்கள் தங்கள் பகுதிகளிலும், நகரப்பகுதிகளிலும் பல்வேறு தொழில்களை துவங்கும் வகையிலும், திறன்பெற்றவர்களாக உருவாக்க, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இலவச திறன் பயற்சி மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அளவில், இளைஞர் திறன் திருவிழா 18 வயது முதல் 45 வரையுள்ள ஆண், பெண் இருபாலரும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நகராட்சிகள் மற்றும் மலைப் பகுதிகளில் முதற்கட்டமாக தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வருகிற 15ம் தேதி முதல் நாமக்கல் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி மற்றும் மலைப்பகுதியான கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 50 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2,856 மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் அரசு உத்தரவுக்கு ஏற்பட்ட இத்திட்டம் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அருகில், 60 படுக்கை வசதி கொண்ட சித்த மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. பின்னர் தொடர்ச்சியாக சித்த மருத்துவ கல்லூரியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விமலாசிவக்குமார், பிஆர்ஓ சீனிவாசன், மகளிர் திட்டத்துறை உதவி திட்ட அலுவலர் மாலதி, அட்மா குழுத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், அசோக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!