எருமப்பட்டி அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மெக்கானிக் பலி

எருமப்பட்டி அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர்  மோதி விபத்து: மெக்கானிக் பலி
X

பைக் விபத்து மாதிரி படம் 

எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தார். இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தார். இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்தவர் சிங்காரம் மகன் மோகன் (28), போர்வெல் மோட்டார் மெக்கானிக் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் எருமப்பட்டி சென்று விட்டு ஊருக்கு திரும்பி சென்றார். அப்போது எதிர்திசையில் சிங்களங்கோம்பையைச் சேர்ந்த விஜயகுமாரின் மனைவி அமிர்தவல்லி (24) தனது மொபட்டில் வந்துகொண்டிருந்தார்.

எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். அமிர்தவல்லிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்