கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி: அருவிகளில் ஆனந்தக் குளியல்
கொல்லிமலையில் உள்ள புகழ்பெற்ற ஆகாயங்கை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மிகச்சிறந்த இயற்கை சுற்றுலாத்தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைக்கு தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளும், மூலிகை ஆராய்ச்சியாளர்களும் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார். கொரோனா லாக் டவுன் காரணமாக கடந்த மார்ச் முதல் பெரும்பாலான நாட்களில் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை செய்யப்பட்டிருந்தது.
அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில், அமைக்கப்பட்டுள் வனத்துறை சோதனைச்சாவடியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு அளித்துள்ள தளர்வால் கடந்த வாரம் முதல் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு கொல்லிமலையில் நல்ல மழை பெய்துள்ளதால், மலைப்பகுதி பசுமையாக, கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இங்குள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி மற்றும் மாசிலா அருவிகளில் சுற்றுலாப்பணயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
அருவி பகுதிகளில் வனத்துறை, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu