கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிப்பு

கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிப்பு
X

ஓரி விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கொல்லிமலையில் நடைபெற்ற ஓரி விழாவில் திரளான பிரமுகர்கள் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கொல்லிமலையில் நடைபெற்ற ஓரி விழாவில் திரளான பிரமுகர்கள் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளில் தமிழக அசின் சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரரோனா தொற்ற பரவல் காரனமாக விழாக்கள் தடை செய்யப்பட்டது. கொல்மலையில் உள்ள ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, சிற்றருவி போன்ற அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் 15 முக்கிய அமைப்புகளின் சார்பில் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வேட்டுவக்கவுண்டர்கள் சமூகத்தினர் உட்பட, அனுமதிபெற்ற அமைப்பினர் சமூக இடைவெளியை பின்பற்றி 5 பேர் வீதம் கலந்துகொண்டு, வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கி.பி. 200-ஆம் ஆண்டான கடைச்சங்க காலத்தில் கொல்லிமலையை ஆட்சிசெய்து வந்த ஓரி மண்ணன், வேட்டையின்போது தாம் எய்த ஒரே அம்பில், யானை, புலி, கலைமான், பன்றி, உடும்பு ஆகிய விலங்கினங்களை துளைத்தது என்று ஓரி மண்ணனின் வில் எய்தும் திறன் குறித்து புறநானூறு பாடல் கூறுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் ஆடிப்பெருக்க விழா கலையிழந்து காணப்பட்டது. நாமக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லிமலையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!