காளப்பநாய்க்கன்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

காளப்பநாய்க்கன்பட்டி நகர  திமுக செயற்குழு கூட்டம்
X

சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாய்க்கன்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டத்தில் எம்எல்ஏ பொன்னுசாமி பேசினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

டவுன் பஞ்சாயத்து செயலாளர் நடே சன் முன்னிலை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தில் விரைவில் டவுன்பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளதால், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள 15வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் அவைத்தலைவர் செல்லமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் கதிர்வேல், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன், ஐடி பிரிவு துணை ஒருங் கிணைப்பாளர் பூபதி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!