கொல்லிமலை அரசு ஐடிஐ-யில் உதவித்தொகையுடன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கொல்லிமலை அரசு ஐடிஐ-யில் உதவித்தொகையுடன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X
கொல்லிமலையில் உள்ள அரசு ஐடிஐ நிறுவனத்தில், உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழங்குடியினருக்கான அரசினர் ஐடிஐ இயங்கி வருகிறது. இங்கு 2021-2022ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள், https://skilltraining.gov.in/ என்ற வெப்சைட்டில் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும்.

ஐடிஐயில் இரண்டாண்டு பயிற்சியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஃபிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் தொழிற்பிரிவும், ஓராண்டு பயிற்சியாக டீசல் மெக்கானிக், 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல் தொழில்நுட்பம் மற்றும் வெல்டர் போன்ற தொழிற்பிரிவுகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.

குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தி அடைந்தவருக்கும், ஆண்களுக்கு 40 வயது வரையும் சேர்க்கை பெறலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை, பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகையாக பயிற்சி காலங்களில் மாதம் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா லேப்டாப், சைக்கிள், வரைபடக் கருவிகள், சீருடை, தையற்கூலி, பாடப்புத்தகங்கள் மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படும்.

மேலும், ஆண், பெண்களுக்கு தனித்தனியே உணவுடன் கூடிய ஹாஸ்டல் வசதி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் என்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்.

விண்ணப்பத்தினை அரசினர் கொல்லிமலை ஐடிஐ அலுவலகத்திலோ, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையம் மூலமோ ஆன்லைன் முறையில் வருகிற 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!