கொல்லிமலையில் அரசு திட்டப்பணிகள் எம்.பி சின்ராஜ் பார்வையிட்டு ஆய்வு

கொல்லிமலையில் அரசு திட்டப்பணிகள் எம்.பி சின்ராஜ் பார்வையிட்டு ஆய்வு
X

கொல்லிமலையில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை, எம்.பி சின்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும், அரசு திட்டப்பணிகளை நாமக்கல் எம்.பி சின்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும், அரசு திட்டப்பணிகளை நாமக்கல் எம்.பி சின்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி எம்.பியும், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் நிலைக்குழு (திசா) உறுப்பினருமான சின்ராஜ், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருப்புளிநாடு, வாழவந்திநாடு மற்றும் அரியூர்நாடு ஆகிய கிராமங்களில் 2 நாட்கள் தீவீர சுற்றுப்பயணம் செய்து, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நபார்டு சாலைகள் திட்டம், வனத்துறை மற்றும் தாட்கோ துறையின் கீழ் முடிவுற்ற மற்றும் நடைபெற்றுக்கொண்டுள்ள திட்டப் பணிகளை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது தரமில்லாமல் கட்டப்பட்டு வந்த ஒரு கழிப்பிட கட்டிடத்தினையும், பள்ளி சுற்றுச் சுவரினையும் முழுமையாக அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் எனவும், குறைபாடுகள் உள்ள பணிகளை உடனடியாக சரி செய்யவேண்டும் என அதிகாரிகள் மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது திசா குழு உறுப்பினர் மாதேஸ்வரன், செந்தில்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai and business intelligence