/* */

கொல்லிமலை: டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்கள்

கொல்லிமலை டாஸ்மாக் கடைகளில் 36 ஆயிரம் காலி பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டன.

HIGHLIGHTS

கொல்லிமலை: டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்கள்
X

பைல் படம்.

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தால், கொல்லிமலையில் 36 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தின் இயற்கை சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலையில் உள்ள இயற்கை வளங்கள், வன விலங்களைப் பாதுகாக்கும் வகையில், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மது அருந்திவிட்டு, ஆங்காங்கே வீசி செல்லும் காலிபாட்டில்களை திருப்பி அவர்கள் வாங்கிய கடையில் ஒப்படைக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் இதற்காக சம்பந்தப்பட்ட மதுக்கடைகள் மூலம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ரூ.10 திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதையொட்டி கொல்லிமலை சோளக்காட்டில் உள்ள மதுக்கடையில் கடந்த 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 22 ஆயிரத்து 512 மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 354 காலிபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் 16 ஆயிரத்து 185 மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 151 காலிபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. செம்மேட்டில் உள்ள மதுக்கடையில் 43 ஆயிரத்து 135 மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. அதில் 19 ஆயிரத்து 421 காலிபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மொத்தமாக கொல்லிமலையில் உள்ள 3 மதுக்கடைகள் மூலம் 35 ஆயிரத்து 926 காலிபாட்டில்கள் திரும்ப பெற்றுள்ளதாகவும், அவற்றிற்கு தலா ரூ.10 வீதம், மொத்தம் ரூ. 3,59,260 திரும்ப வழங்கப்பட்டதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 5 July 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!