எருமப்பட்டி அருகே வீட்டில் ரேசன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது

எருமப்பட்டி அருகே வீட்டில் ரேசன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது
X

பைல் படம்.

எருமப்பட்டி அருகே கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லுசாமி மகன் பாலாஜி (21). இவர், கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக, தனது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார். அங்கு சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைவக்கப்பட்டிருந்த 1,050 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக பாலாஜியை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்