சேந்தமங்கலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

சேந்தமங்கலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

Farmer Suicide - சேந்தமங்கலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Farmer Suicide -நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியில் கருமலைக்கரடு உள்ளது. இந்த கரட்டில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, சடலமாக கிடந்தவர் கொல்லிமலை அரியூர்நாடு பஞ்சாயத்து, தெகவாய்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கையன் என்பதும், அவரை கடந்த 13-ந் தேதி முதல் காணவில்லை என்று அவருடைய மனைவி பார்வதி ஏற்கனவே போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது. மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. தங்கையன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!