எருமப்பட்டி அருகே பகலில் வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை திருட்டு

எருமப்பட்டி அருகே பகலில் வீடு புகுந்து  8 பவுன் தங்க நகை திருட்டு
X

மாதிரி படம் 

எருமப்பட்டி அருகே பகல் நேரத்தில் வீட்டில் நுழைந்து 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

எருமப்பட்டி அருகே உள்ள ஜீவா நகரைச் சேர்ந்தவர் தண்டபானி, தச்சு தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (45). சம்பவத்தன்று தண்டாபனி வேலைக்குச் சென்றுவிட்டார். அவரது மனைவி பரிமளா வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மாலையில் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க சங்கிலி திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து பரிமளா எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்