எருமப்பட்டியில் வரி செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

எருமப்பட்டியில் வரி செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் கட்டணம் செலுத்தாத 40 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 2,413 குடிநீர் இணைப்புகள் உள்ளன. பொதுமக்கள் பலர் குடி நீர் கட்டணம் காட்டாமல் பாக்கி வைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ஒரே நாளில் சுமார் 40 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் கட்டணம் பாக்கி வைத்துள்ள அணைத்து குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்படும் எனவும், இந்த பணி மேலும் ஒரு வாரம் தொடரும் என டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா