எருமப்பட்டி அருகே திமுக பிரமுகருக்கு கொடுவாள் வெட்டு: 2 பேர் கைது

எருமப்பட்டி அருகே திமுக பிரமுகருக்கு கொடுவாள் வெட்டு: 2 பேர் கைது
X

கோப்பு படம் (கைது)

எருமப்பட்டி அருகே திமுக பிரமுகரை கொடுவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி அருகே திமுக பிரமுகரை கொடுவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் நடராஜபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார் (37) என்பவர், எருமப்பட்டி அருகே உள்ள, பொன்னேரி கைகாட்டி பகுதியில் வசித்து வருகிறார். தி.மு.க. பிரமுகரான இவரும், இவருடைய நண்பர்களும் ரோடு ஓரம் இருந்த கடையில் கரும்பு ஜூஸ் குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, தூசூரை சேர்ந்த வீரபாண்டி நவீன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து வினோத்குமார் தலை மற்றும் காலில் கொடுவாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக புகாரின்பேரில், எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேதரமாதேவியை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் (22), துரைசாமி மகன் விஜய் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project