எருமப்பட்டியில் கனமழையால் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

எருமப்பட்டியில் கனமழையால் பயிர்கள்  சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
X

பைல் படம்.

எருமப்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மரவள்ளி, வெங்காயம், வேர்கடலை பயிர்கள், மஞ்சள், போன்ற பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எருமப்பட்டி பகுதியில் கடந்த 15 நாட்களாக பெய்த தொடர்மழையால் மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், வேர்கடலை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாய நிலங்களில் ஆய்வு செய்து கனமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!