சேந்தமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு: கலெக்டர் பங்கேற்பு

சேந்தமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு: கலெக்டர் பங்கேற்பு
X

சேந்தமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்தார்.

சேந்தமங்கத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கிப் பேசியதாவது:

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தங்கள் உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும், கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை டாக்டர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை கேட்டு பின்பற்ற வேண்டும்.

வசதி வாய்ப்பு குறைவால் வளைகாப்பு நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசால் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலவசமாக பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. டாக்டர்களின் ஆலோசனைப்படி கர்ப்பிணிகள் மருந்துகள் உட்கொள்ள வேண்டும் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், முருகன் கோவில் ஓடையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்காலில் சிறு குட்டை அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஐசிடிஎஸ் மாவட்ட திட்ட அலுவலர் ஜான்சிராணி, பிஆர்ஓ சீனிவாசன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் மாலதி, டாக்டர் அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!