கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
X

பைல் படம்.

கொல்லிமலை ஆரியூர்நாடு, பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை தாமாக முன்வந்து போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையொட்டி மலைவாழ் மக்கள் பலரும் தங்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஆரியூர்நாடு பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 3 லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்றுக் கிடந்தன.

அவைகளை யார் அங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது தெரியவில்லை. பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம், அந்த துப்பாக்கிகளை எடுத்துச் சென்று செம்மேட்டில் உள்ள வாழவந்திநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் துப்பாக்கிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்