கொல்லிமலையில் 2வது மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது

கொல்லிமலையில் 2வது மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது
X

பைல் படம்.

கொல்லிமலையில் 2-வது மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரசம்பட்டி வளப்பூர் நாடு பகுதியச் சேர்ந்தவர் கொங்கன் (60), விவசாயி. இவரது முதல் மனைவி ராசம்மாள். இவருக்கு 3 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராசம்மாள் இறந்துவிட்டார். அதன்பின் 2 - வது மனைவியாக முள்ளுக்குறிச்சி மலையாளப் பட்டியை சேர்ந்த மணியம்மாள்(55) என்பவரை இரண்டு வருடத்திற்கு முன்பு கொங்கன் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, மணியம்மாள் கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சில நாட்கள் கழித்து நேற்று, மீண்டும் கணவர் கொங்கனைப் பார்க்க மணியம்மாள் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் கோபமடைந்த கொங்கன், மனைவி மணியம்மாளை சவுக்கு தடியால் சரமாரியாக அடித்துள்ளார். கை, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு அவர் மயக்கமடைந்தார்.

அவரை அப்படியே விட்டுவிட்டு கொங்கன் மாடு மேய்க்க சென்றுவிட்டார். மாலை திரும்பி வந்து பார்த்த போது மணியம்மாள் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலின்பேரில், வாழவந்தி நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொலை செய்த வழக்கில் கொங்கனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!