/* */

கொல்லிமலையில் ரூ.2.25 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா மையம்: அமைச்சர் தகவல்

கொல்லிமலையில் ரூ.2.25 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் ரூ.2.25 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா மையம்: அமைச்சர் தகவல்
X

கொல்லிமலையில் உள்ள போட் ஹவுஸை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ரூ.2.25 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சூழல் சுற்றுலா மையம் அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கொல்லிமலையில் உள்ள தாவரவியல் பூங்கா, போட் ஹவுஸ், வியூ பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில் மானிய கோரிக்கையில் சுற்றுலாத்துறைக்கு, முதன்முறையாக மாநில அளவில் சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சித் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பல்வேறு சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் அவற்றை மேம்படுத்துதல், சுற்றுலா பயணிகளுக்காக சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்துதல் மற்றும் சூழல் சுற்றுலா மேற்கொள்ளுதல் போன்ற புதுவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலா தலங்களை மேம்படுத்திட 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில் கொல்லிமலையில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் சூழல் சுற்றுலா தலம் உருவாக்கப்படும். கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்கு தங்கி சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கொல்லிமலையில் உள்ள படகு இல்லத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் இப்பகுதி மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா தலங்களில் உள்ள விடுதிகள் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ராணிபேட்டை, குன்னூர் மற்றும் சென்னை தீவு திடல் ரெஸ்டாரெண்ட், வண்டலூர் உணவகம் உள்ளிட்டவை ஒப்பந்ததார்களிடமிருந்து திரும்ப பெறப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் மூலம் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் தற்போதைய தலைமுறைக்கு ஏற்றவாறு புதுப்பொலிவுடன் கூடிய கட்டிட அமைப்புகள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு மேம்படுத்தப்படவுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வருகைதரவுள்ள 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திடும் வகையில், சுற்றுலாத்துறையின் மூலம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில் அழைத்து செல்லப்படவுள்ளார்கள். இதையொட்டி, டூரிசம் ஃபிரண்ட்லி 20 ஆட்டோக்கள் மற்றும் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் சென்னையின் பராம்பரியம் மற்றும் சிறப்பு மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, டிஆர்ஓ கதிரேசன், ஆர்டிஓ மஞ்சுளா, மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 16 July 2022 4:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!