இராசிபுரத்தில் மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு எம்.பி உதவி

இராசிபுரத்தில் மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு எம்.பி  உதவி
X

இராசிபுரம் பகுதியில், மழையால் வீடிழந்த குடும்பத்தினருக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய, எம்.பி. ராஜேஷ்குமார்.

இராசிபுரம் பகுதியில், மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு, எம்.பி. ராஜேஷ்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இராசிபுரம் பகுதியில், கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கோனேரிப்பட்டி, 20வது வார்டு காலனி தெருவில் கோபால், ராணி மற்றும் பெரியசாமி, பழனியம்மாள், நடுத்தெரு தங்கவேல், பாப்பாத்தி மற்றும் 23 வார்டு அப்பு சந்து வாசு, பூங்கொடி ஆகியோரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதனை அறிந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், வீடிழந்த 4 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர், தாசில்தார் கார்த்திகேயன், நகராட்சி கமிஷனர் கிருபாகரன், சுகாதார ஆய்வாளர் திருமூர்த்தி உள்ளிட்டோர், இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்