/* */

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு
X

ராசிபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடத்தை, அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையம், தற்போது தாசா தெருவில் செயல்பட்டு வருகின்றது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பிரிவு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பிரிவு ஆகியன செயல்பட்டுவருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனைகளும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணிகளும் இங்கு நடைபெறுகின்றன.

தினசரி அதிகமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வதால், இடம் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ராசிபுரம் அண்ணா காலனி, வார்டு எண்.8ல் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், நன்கொடையாளர் ராஜேஸ்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 July 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’