அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து முன்னாள் எம்.பி சுந்தரத்திற்கு வரவேற்பு

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து  முன்னாள் எம்.பி சுந்தரத்திற்கு வரவேற்பு
X

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி சுந்தரத்திற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், திமுக தலைவர் கருணாநிதியின் படத்தை வழங்கி வரவேற்பு அளித்தார்.

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி பி.ஆர். சுந்தரத்திற்கு ராசிபுரத்தில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத்தலைவராக இருந்த முன்னாள் எம்.பி சுந்தரம், அக்கட்சியின் இருந்து விலகி சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து ராசிபுரம் வந்த அவருக்கு, திமுகவினர் வரவேற்பு அளித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

நகர செயலாளர் சங்கர் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சுந்தரத்திற்கு வரவேற்பு அளித்தனர். திமுகவின் செயல்பாடு, திட்டங்கள் எனக்குப் பிடித்துள்ளதால் திமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவினர் யாரையும் திமுகவில் சேர கட்டாயப்படுத்த மாட்டேன். எனக்கு அதிமுக துரோகம் இழைத்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!