இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட   புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:  2 பேர் கைது
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இராசிபுரம் அருகே சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தடை செய்யப்பட்ட 30 கிலோ அளவிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் ராசிபுரத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி இனாயத்துல்லா (50), திருச்செங்கோட்டைச் சேர்ந்த வெங்காய வியாபாரி விஜயகுமார் (49) என்பதும் தெரிய வந்தது. இராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!