இராசிபுரம் பட்டதாரி கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

இராசிபுரம் பட்டதாரி கொலை வழக்கில்  தலைமறைவான வாலிபர் கைது
X

பைல் படம்

இராசிபுரம் அருகே பட்டதாரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

இராசிபுரம் அருகே உள்ள மேற்குவலசு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (39), பட்டதாரி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணைப்பாளையம் பை-பாஸ் ரோட்டில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இராசிபுரம் போலீசார் சடலத்தைக்கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரசோதணை அறிக்கையில், சரவணன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையொட்டி, கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணைமேற்கொண்டனர். அப்போது, முன்விரோதம் காரனமாக சரவணனை கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவ்வழக்கு சம்மந்தமாக தொட்டியவலசு பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன் (45), மூக்குத்திபாளையம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் கோபிசங்கர் (36), நெ.3 குமாரபாளையத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பிரவீன் குமார் (36) ஆகிய 3 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த மல்லசமுத்திரத்தை சேர்ந்த ரவி என்கிற ரவிச்சந்திரனை (22) , தற்போது ராசிபுரம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!