நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
X

நாமகிரிப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுந்தனர்.

நாமகிரிப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

நாமகிரிப்பேட்டை நகரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக சுவாமிக்கு பாலபிசேகம், சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் விரதம் இருந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. சுந்தரம், போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார், முத்தாயம்மாள் கலை கல்லூரி செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேரிழுத்தனர். திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!