முத்துக்காளிப்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை அமைச்சர் துவக்கி வைப்பு

முத்துக்காளிப்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை அமைச்சர் துவக்கி வைப்பு
X

முத்துக்காளிப்பட்டியில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அருகில் ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார்.

முத்துக்காளிப்பட்டியில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், முத்துக்காளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் இயங்கிவரும் ரேசன் கடைக்கு, தமிழக முதல்வர் அனுமதியின் பேரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், ஆர்சிஎம்எஸ் மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!