இராசிபுரம் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

இராசிபுரம் அருகே கள்ளத்துப்பாக்கி  வைத்திருந்த விவசாயி கைது
X

பைல் படம்

இராசிபுரம் அருகில் லைசென்ஸ் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இராசிபுரம் தாலுக்கா மங்களபுரம் அருகில் உள்ள தாண்டாக்கவுண்டம்பாளையம் கிராமம், உரம்பு வண்ணாங்காடு பகுதியில், மங்களபுரம் போலீஸ் எஸ்.ஐ மணி போலீசாருடன் ரோந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி உரம்பு வண்ணாங்காட்டில் உள்ள கருப்பண்ணன் (42) என்ற விவசாயி வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள விறகு பட்டறையில் லைசென்ஸ் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையொட்டி கருப்பண்ணன் மீது மங்களபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கள்ளத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story