ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை கலெக்டர் ஆய்வு
X

ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தை, மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை, மாவட்ட ஆட்சியர் உமா பேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சி அருகில் உள்ள தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளதையும், மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதையும், காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தில் சுற்றிலும் இரண்டுடடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் ஆட்சியர்பார்வையிட்டார்.

மேலும் போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணியினையும், ஆம்புலன்ஸ் வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் விலங்குகள் நல வாரிய உறுப்பினர் முனைவர் மிட்டல் ஆகியோர் துறை அலுவலர்களுடன், ஜல்லிக்கட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, நாமக்கல் ஆர்டிஓ (பொ) சுகந்தி, டிஎஸ்பி செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொ) நடராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்