ராசிபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதல்: பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதல்: பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

ராசிபுரம் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற பெண் பரிதாபமாக உயிழந்தார்.

ராசிபுரம் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற பெண் பரிதாபமாக உயிழந்தார்.

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கணவாய்மேடு பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன் (67), விவசாயி. இவருடைய மனைவி சகுந்தலா (54). கணவன் மனைவி இருவரும் அத்தனூர் அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக டூ வீலரில் சென்றனர். டூ வீலரை அத்தியப்பன் ஓட்டினார். பின்னால் சகுந்தலா அமர்ந்து சென்றார்.

ராசிபுரம்-திருச்செங்கோடு ரோட்டில், பாலப்பாளையம் பகுதியில் சென்றபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த கார் டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த அத்தியப்பன் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பேளுக்குறிச்சி எஸ்ஐ தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!