ராசிபுரத்தில் தியாகி வரதராஜூலு நாயுடுவின் பிறந்த நாள் விழா

ராசிபுரத்தில் தியாகி வரதராஜூலு நாயுடுவின் பிறந்த நாள் விழா
X

ராசிபுரத்தில் நடைபெற்ற, தியாகி வரதராஜூலுநாயுடுவின் பிறந்த நாள் விழாவில், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் 135-வது பிறந்த தினவிழா ராசிபுரத்தில் நடைபெற்றது.

சுதந்திர போராட்டத்தின்போது ராசிபுரத்தைச் சேர்ந்த, தியாகி பி.வரதராஜுலுநாயுடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். சிறந்த தொழிற்சங்கவாதி, சிறந்த பத்திரிகையாளர். பொதுமக்களிடம் சுதந்திரப் போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். சென்னை மாகாண சட்டசபையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். இவரது பிறந்த தினவிழா சொந்த ஊரான ராசிபுரம் பழைய பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. விடுதலை களம், நாயுடு நண்பர்கள் குழு சார்பில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வரதராஜூலு நாயுடுவின் சொந்த ஊரான ராசிபுரத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க வேண்டும், முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை களம் அமைப்பின் நிறுவனர் கொ.நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மோகன்நாயுடு முன்னிலை வகித்தார். ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர், நகர திமுக செயலாளர் சங்கர், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஏ.சித்திக், நாயுடுகள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture